Breaking News
Home > News

News

Oneindia Tamil News – OneIndia Tamil Newspaper. OneIndia Tamil news, OneIndia Tamil news paper. OneIndia Tamil Indian newspaper, OneIndia Tamil india. Daily OneIndia Tamil.

இலங்கை வரை பரவிய சசிகலா புகழ்… சிறையில் தலையனை கேட்டது குறித்து அமைச்சர் விமர்சனம்

sri lankan minister was talking abount sasikala a party public meeting

கொழும்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஏசி ரூம், வீட்டுச்சாப்பாடு உள்ளிட்ட சலுகைகளை கேட்டார். இந்த விவகாரம் குறித்து இலங்கை இணை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் விமர்சித்துள்ளார். இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டின் இணை அமைச்சராக உள்ளார். இவர் கோகலை நகரில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை …

Read More »

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஓய்வு

pakistan cricketer shahid afridi announce retires

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகின் ஆபத்தான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி. 36 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர் 20 ஓவர் …

Read More »

உத்தரபிரதேசத்தில் 3ம் கட்டத் தேர்தல்… 61 சதவீதம் வாக்குகள் பதிவு

voting phase iii begins 69 constituencies up

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்று மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 …

Read More »

வினய் கத்தியார் இப்படிப் பேசலாம்.. நாட்டின் பிரதமர் பேசலாமா??

pm modi s speech fatehpur creates debates

பதேபூர், உ.பி.: ரம்ஜானுக்கு தடையில்லாமல் மின்சாரம் தரப்படுமானால், அதே மின் வசதி தீபாவளிக்கும் தரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதம், ஜாதியின் பெயரால் எந்த அரசும் பாரபட்சமாக நடக்க முடியாது என்றும் மோடி பேசியுள்ளார். மோடியின் இந்த.ப் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Read More »

சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

dmk pressurizes governor act

சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் …

Read More »

பண ஒழிப்பு விவகாரத்துக்கு தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர்!- ராகுல், அகிலேஷ்

rahul gandhi akilesh blasting pm modi

லக்னோ: ரூ 1000, 500 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததற்காக உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கூறினர். உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: அகிலேஷ் யாதவுடன் நான் …

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்

governor asks a report from the secretary the assembly

சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை …

Read More »

டெல்லி அஞ்சலகத்தில் 17 பணப் பைகள் கொள்ளை.. அதிகாலையிலேயே கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள்

robbery delhi post office 17 cash bags looted

டெல்லி: ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் 17 பணப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் அஞ்சலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது பணப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 17 பைகள் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தப் பணப்பைகள் இன்று அதிகாலை …

Read More »

விசாரணைக் கைதி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை… திருச்சியில் பரபரப்பு

prisoner committed suicide hanging trichy

திருச்சி: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி சமயபுரம் அருகில் உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. 32 வயதான இவர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், விசாரணைக் கைதியான பழனிச்சாமி சிறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருச்சியில் பரபரப்பு …

Read More »

கட்சிக்குள் குழப்பம் செய்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் – திருநாவுக்கரசர் பரபரப்பு புகார்

tncc president thirunavukkarasar blasts evks elangovan

கடந்த சில தினங்களுக்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவிற்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிக்குள் இளங்கோவன் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

Read More »

நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க.. சொல்கிறார் தீபா!

deepa consoles admk cadres

சென்னை: அதிமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார் தீபா. ஜெயலலிதா வழியில் நாம் பயணிப்போம். நான் சொன்ன சொல் மாற மாட்டேன். இறுதி வரை அதில் உறுதியாக இருப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார். வழக்கம் போல தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் பேசினார் தீபா. அவரது பேச்சிலிருந்து:

Read More »

தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கே அவமானம்: வெங்கையா நாயுடு

tn assembly was disgrace democracy says venkaiah naidu

டெல்லி: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.

Read More »

பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

m k stalin accusation on tamilnadu assembly speaker dhanapal

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது. நம்பிக்கை தீர்மானத்தை சட்டமன்றத்தில் இரண்டு முறை முன்மொழிந்தார் சபாநாயகர். …

Read More »

அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.. ரிசார்ட்டை நாறடிச்சுட்டாங்க.. அதிமுக எம்எல்ஏக்கள் மீது புகார்

admk mlas were always bar say golden bay owners

சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது மது பாட்டிலும் கையுமாக பாரிலேயே பழியாக கிடந்தனர் என்று ரிசார்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் தியானம் இருந்து விட்டு சசிகலாவிற்கு எதிராக பேட்டி அளித்தார். தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். 11 …

Read More »

எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: வக்கீல் ஆச்சார்யா அதிரடி

sr-adcovate-acharya-seeks-governor-rule-3-month-tn

பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய …

Read More »